Sorry, nothing in cart.
Sorry, nothing in cart.
In Stock
In stock
Estimated Delivery 3-4 weeksநூல் அறிமுகம்
இது ஒரு மனிதனின் கதை.
காலம் தெய்வமாய் மாற்றிய ஒரு மனிதனின் கதை.
கிமு 1900. இன்றைய இந்தியர்கள், சிந்து சமவெளி நாகரீகம் என்று தவறாக குறிப்பிடுவது வழக்கம்.
அன்று வாழ்ந்தவர்களோ, அந்த நிலப்பரப்பை மெலூஹா என்று அழைத்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன் உலகின் மிகச்சிறந்த அரசர்களுள் ஒருவரான இராமபிரான் உருவாக்கிய ஏறக்குறைய அற்புதமான சாம்ராஜ்யம்.
காலத்தில் ஒரு புகழும் பெருமையுமாய் சிறந்து விளங்கிய இதன் ஆட்சியாளர்களான சூரிய வம்சிகள், பல ஆபத்துகளைச் சந்திக்கின்றனர். அவர்களது ஜீவநதி சரஸ்வதி, வற்ற ஆரம்பித்து, முற்றுமாய் அழியத் துவங்கிவிட்டது. கிழக்கே வாழும் சந்திர வம்சகளிடமிருந்து பயங்கர தீவிரவாதித் தாக்குதல்களையும் சந்திக்கின்றனர். நிலைமையை இன்னும் சிக்கலாக்கும் விதமாய், சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு விகாரமடைந்த முகமும் உடலுமாய், பல அற்புத சக்திகள் படைத்த நாகர்கள் என்னும் குலத்தாருடன் சந்திர வம்சிகள் கைகோர்த்துக் கொண்டது போலவும் தெரிகிறது.
இப்போது சூரியவம்சிகளின் ஒரே நம்பிக்கை, என்றோ அவர்களிடையே பரவி, வேரூன்றிவிட்ட ஒரு ஆருடம்: ’தீமை தலை விரித்தாடும்போது; அதன் கொடூரம் எல்லை மீறி, எதிரிகள் முழுமையாய் வென்றுவிட்டார்கள்; இனி, போக்கிடம் இல்லை என்ற நிலை ஏற்படும் போது ஒரு வீரன் வருவான்.’
யாரது? கரடு முரடான திபேத்திய நாட்டிலிருந்து குடிப்பெயர்ந்து வரும் சிவன் தானோ?
உலகைக் காப்பாற்றும் அந்த வீரனாய் உருவாவதில் அவருக்கு சம்மதம் தானா?
கடமை மட்டுமில்லாது, காதலாலும் கவர்ந்திழுக்கப்படுபவர். உண்மையில் சூரிய வம்சிகளை வழிநடத்தி அவர்களுக்காகத் தீமையை அழித்து விடுதலையளிப்பாரா?
சிவா முத்தகுதியில் இதுவே முதல் புத்தகம். சாதாரண மனிதன் ஒருவனின் பிறவிப் பயன், அவனை நம் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாய் மகா தேவராய் மாற்றிய கதை.
Weight | 326 g |
---|---|
Dimensions | 13 × 3 × 19.8 cm |
Author | Amish Tripathi |
Publisher | Eka |
Type | Paperback |
Reviews
There are no reviews yet.