- 
                                                          The Oath Of The Vayuputras – Vayuputrar Vaakku – Pages & Petals Product Descriptionநூல் அறிமுகம் தீமை உயிர்பெற்று எழுந்துவிட்டது. தெய்வத்தால் மட்டுமே அதைத் தடுக்க முடியும். சிவன், தன் படைகளைத் திரட்டத் தொடங்கிவிட்டார். நாகர்களின் தலைநகரான பஞ்சவடியை அடைந்தவுடன், தீமையின் உண்மையான சொரூபம், ஒரு வழியாக வெட்ட வெளிச்சமாகிறது. வீரர்களுக்கெல்லாம் வீரர்களாய் விளங்குவோர் கூட நெஞ்சு பதறி, குலைநடுங்கும் ஒரு மனிதனுக்கெதிராய், அவரது உண்மையான விரோதிக்கு எதிராய், நீலகண்டர் புனிதப் போர் தொடங்க ஆயத்தமாகிறார். ஆழிப்பேரலையாய் தொடர்ந்து மூழ்கடித்துத் தாக்கும் பல கொடூரப் போர்களால் இந்தியா நிலைதடுமாறுகிறது; தவித்துத் தத்தளிக்கிறது. இந்தப் புனித தேசத்தின் ஆன்மாவைப் பாதுகாக்கும் முயற்சியில் நடக்கும் போராட்டங்களில், பலர் உயிரிழக்கப்போவது நிச்சயம். விலை எப்பேர்ப்பட்டதாய் இருந்தாலும், இந்தப் போரிலிருந்து சிவன் பின்வாங்கக்கூடாது; முடியாது. வழி தெரியவில்லை; பாதை புரியவில்லை. யாரை அணுகுவது? இதுவரை தனக்கு எவ்வித உதவியும் அளிக்காதவர்களையா? ஆயினும், சிவனுக்கு வேறு வழி தெரியவில்லை. இறுதியில், சிவன் சென்றடைவோர்: வாயுபுத்ரர்கள். அவரது முயற்சியில் வெற்றி கிட்டுமா? தீமையை அழிக்கும் பெரும்போராட்டத்தில் இந்தியா – ஏன், அவரது உள்ளம் – இன்னும் எதையெதையெல்லாம் விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கும்? விற்பனையில் சாதனை படைத்த சிவா முத்தொகுதியின் இந்த இறுதிப் பகுதியில், மேற்சொன்ன மர்மக் கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் காத்திருக்கின்றன. Additional informationWeight 326 g Dimensions 13 × 3 × 19.8 cm Author Amish Tripathi Publisher Eka Type Paperback 
 
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
 
 
           
           
           
           
           
           
           
          
Reviews
There are no reviews yet.